இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திரு.செல்வராஜ் மற்றும் காவலர் திரு.ரெத்தினம் ஆகியோர் அளித்த தகவலின் அடிப்படையில் இரண்டு தினங்களுக்கு முன் சிக்கல் காவல் நிலையப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில், சட்டவிரோத விற்பனைக்காக வாகனத்தில் புகையிலைப் பொருட்களைக் கொண்டு சென்ற சுப்புராஜ் மற்றும் கருமலையான் ஆகிய இருவரையும் சிக்கல் காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 17 கிலோ புகையிலைப்பொருட்கள், பணம் ரூபாய் 47,200/- மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் இன்று 11.12.2024 இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் தனிப்பிரிவு காவலருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கடையில் சோதனையிட்டு, 40 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment