இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் எடுத்தவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை புதுப்பிக்க அரசு உத்தரவு செய்து இருந்தது இந்நிலையில் அடையாள அடைடையை புதுப்பிக்கும் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. (ஆதார் கார்டு புதுப்பிக்க )மாவட்ட ஆட்சியர் அலுவலகம். மற்றும் தலுகா அலுவலகங்கள் ஆதார் அரசு சேவை மையம் தபால் அலுவலகம், வங்கிகள் போன்ற இடங்களில் ஆதார் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024 ஆண்டுக்குள் புதுப்பிக்க அரசு அவகாசம் கொடுத்து இருந்த நிலையில் தற்போது மேலும் 2025 ம் ஆண்டு ஜூன் மாதம் 14 ந்தேதி வரையில் ஆதார் கார்டு புதுப்பித்துக்கொள்ள அரசு அவகாசம் கொடுத்துள்ளது.
தற்போது ஆதார் மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தவிர்த்து காலதாமதம் இல்லாமல் தங்கள் ஆதாரை புதுப்பித்துகொள்ள வேண்டும் என தெரியபடுத்துகின்றனர்.
No comments:
Post a Comment