சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படுத்தும் அபாயம்.
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் கீழசெல்வனூர் பேருந்து நிறுத்தம் மற்றும் பள்ளிவாசல் அருகில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி வந்த நிலையில் தற்போது மழைர் நீரும் சேர்ந்தது இதனால் சாக்கடையும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது இப்பகுதி மக்களுக்கு மற்றும் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது இதனை உடனடியாக கீழச்செல்வனூர் ஊராட்சி நிர்வாகம் கழிவு தேங்காமல் அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment