இராமநாதபுரம் சின்ன ஏர்வாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பழுதடைந்த கட்டிடம்., இதை மாற்றி புதிய கட்டிடம் கட்டித்தர கோரி மாவட்ட ஆட்சித்தலைவரிடம், மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 330 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இந்நிலையில் போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர் . மேலும் 2003 - 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்போது மூன்று வகுப்பறை இயங்கி வருகிறது மேலும் கட்டிடத்தின் மேற்கூறை அவ்வப்போது இடித்து விழுவதாலும் தற்போது தொடர்மழை பெய்து வரும் காரணமாக இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவர்கள் பெரும் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியி கூடத்திற்கு புதிய கட்டிடம் கட்டித் தர கோரி ,பொது மக்களின் குறை தீர்க்கும் நாளாக இன்று , மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், அவர்களிடம் சின்ன ஏர்வாடி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
No comments:
Post a Comment