மண்டபம் வேதளை பகுதியில் இலங்கைக்கு கடத்த இருந்த 611 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்த காவல்துறையினர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தனிப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்க்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து காவல்துறையினர். வேதாளை தெற்கு தெருவில் உள்ள ராஜா முகமது என்பவரது வீட்டைச் சோதனை செய்ததில் அவரது வீட்டில் இலங்கைக்குக் கடத்துவதற்காக 611 கிலோ கடல் அட்டைகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்., இதனை தொடர்ந்து காவல்துறையினர் கடல் அட்டைகளைப் பதுக்கி வைத்திருந்த ராஜா முகமது என்பவரையும் மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 611 கிலோ, கடல் அட்டைகளையும். மண்டபம் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment