இராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற திருவள்ளுவரின் வெள்ளிவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செய்தார்.
இராமநாதபுரம் மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவரின் வெள்ளிவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் கலோன் திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் பின்னர் நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் புகைப்படக்கண்காட்சி மற்றும் திருக்குறள் புத்தக கண்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டார் திருவள்ளுவரின் வெள்ளி விழாவையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் திருக்குறள் தொடர்பான பல்வேறு போட்டியில் நடைபெற்றன, அதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கான வாசகர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெறுகிறது. இப் போட்டிகளில் மாணவ மாணவியர் மற்றும் வாசகர்கள் அதிக அளவில் பங்கேற்று சிறப்பிட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகர் அற்புத ஞான ருக்மணி மாவட்ட நூலக கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வாசகர்கள் நூலகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment