இராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் அவதி.
இராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமை பொது மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து மருத்துவ சிகிச்சை மற்றும் அவசர விபத்து சிகிச்சைக்காக வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் இரண்டு நுளைவாயில் உள்ளது
சரியான வழி காட்டி பதகை இல்லாததால் இங்கு பணியில் உள்ள ஊழியர்கள் நர்ஸ் இடத்தில் சிகிச்சைக்கு உரிய இடத்தை கேட்கும்போது .அலட்சியமாக பதில் சொல்லி அனுப்பி வைக்கின்றனர்.
புற நோயாளி பிரிவு சிகிச்சைக்கான மருத்துவ சீட்டு பெற இரண்டு பக்கம் கவுண்டர் உள்ள நிலையில் நோயாளிகளை இங்கும் அங்கும் இரண்டு மூன்று முறை சென்று வர அலட்சியமாக பதில் சொல்கின்றனர்.பகல்
12 மணிக்கு மேல் ரத்தம் பரிசோதனை செய்ய முடியாது எனவும் மறுநாள் காலையில் வந்து பரிசோதனை செய்து டாக்டர் இடத்தில் காண்பித்து கொள்ளுங்கள் எனவும் சொல்லி அனுப்பி வைத்து விடுகின்றனர். மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் மட்டுமே தற்போது அதிகமாக பணியில் உள்ளனர். அனுபவம் உள்ள டாக்டர்கள் சொந்த மருத்துவ மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க சென்று விடுவதாகவும் சிகிச்சைக்கு வருவோர்களை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்வதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மேலும் இங்கு ஸ்கேன் மற்றும் எக்ரே எடுக்கும் மிஷின் இன்னும் பழைய கட்டிடத்தில் இயங்குவதால் நோயாளிகள் இரவு நேரங்களில் ஸ்கேன் எடுத்து வர மிகவும் சிரமம் அடைகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பொது மக்கள் நாடுகின்றனர். இங்கு குறைபாடுகள் உள்ளதால் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டு இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் குணமாகும் வகையில் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பொது மக்கள் சமூகஆர்வர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment