இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாவட்டத்தில் உள்ள கம்மாய்கள் , மற்றும் கால்வாய் தூர்வார மாவட்ட ஆட்சியரிடம், கோரிக்கை - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, December 20, 2024

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாவட்டத்தில் உள்ள கம்மாய்கள் , மற்றும் கால்வாய் தூர்வார மாவட்ட ஆட்சியரிடம், கோரிக்கை


இராமநாதபுரம்  மாவட்ட  விவசாயிகளின்  குறை தீர்க்கும் கூட்டத்தில்  விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாவட்டத்தில் உள்ள  கம்மாய்கள் , மற்றும் கால்வாய் தூர்வார மாவட்ட ஆட்சியரிடம், கோரிக்கை வைத்தனர்.


 இராமநாதபுரம் மாவட்ட  விவசாயிகள்  குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வாரியாக விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளையும் கருத்துக்களையும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கையை  கேட்டறிந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் 


தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் நலம் காக்கும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் திட்டங்கள் ஒவ்வொன்றாக அனைத்து விவசாயிகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு அலுவலர் நியமிப்பது மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் வைகை அணையில் இருந்து வரும் தண்ணீர் அனைத்து கால்வாய்களும் செல்லும் வகையில் வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்களை தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுரைகள் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும். கிசான் விகாஸ் கடன் அட்டை அனைத்து விவசாயிகளுக்கும் மேற்கொள்ளப்படுவதாகவும் மிளகாய் மற்றும் பருத்திக்கு வேளாண்மை விற்பனை துறை மூலம் சந்தைப்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேலும் குளிர்சாத கிடங்குகளில் தங்கள் விலைப் பொருள்களை இருப்பு வைத்து தேவையான நேரத்தில் அதிக விலைக்கு விற்று லாபம் பெற்றிடவும் மலை நன்கு பொழிந்து கண்மாய்களில் பெரும் அளவு தண்ணீர் உள்ளது, வேளாண் அலுவலகங்களுக்கு தேவையான இடுப்பொருள்கள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் நன்றாக அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகளின்  கோரிக்கைகளுக்கு இரண்டேற்கு மேற்பட்ட துறைகள் தொடர்பு இருந்தால் உடனடியாக தொடர்புடைய அலுவலர்கள் ஆலோசனை செய்து விவசாயிகளின்  கோரிக்கையை உடனடியாக   நிறைவேற்றிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தெரிவித்தார்.


இந்த கூட்டத்தில் விவசாயிகள்  சங்க பிரதிநிதிகள்  மற்றும் அரசு அலுவலர்கள்  விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad