இராமநாதபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகளை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் செயல் பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, December 18, 2024

இராமநாதபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகளை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் செயல் பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு

 


இராமநாதபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகளை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் செயல் பட்டு வருவதை  மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் 


இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன்.  அனைத்து துறை அலுவலர்களுடன் அரசின்  திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தவுடன் ஒவ்வொரு துறை அலுவலர்களுடன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இராமநாதபுரத்தை ஆய்வு செய்து அதன் மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகளை கண்டறிந்தால் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதுடன் இத்திட்டத்தின் நோக்கம் அரசு வழங்கும் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். ஒவ்வொரு துறை அலுவலரும் தங்கள் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான வழிகாட்டில் மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் தொடர்ந்து இராமநாதபுரத்தில் வேளாண்மை துறை மூலம் செயல்பட்டு வரும் உயிர் உரம் உற்பத்தி மையத்தை பார்வையிட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேவையான அளவிற்கு உயிர் உரங்கள் உற்பத்தி செய்து வழங்கிட வேண்டுமென வேளாண் துறைக்கு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜு, உதவி ஆட்சியர் பயிற்சி முகமது இர்ஃபான், மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் மோகன்ராஜ், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் தனலட்சுமி மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad