இராமநாதபுரம் டிச.24- முன்னாள் தமிழக முதலமைச்சர் பாரத் ரத்ன எம்ஜிஆர் அவர்களின் 37.வது நினைவு தினம் இராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் அரண்மனை முன்பாக அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக கட்சியின் நிறுவனருமான எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினமான இன்று டிசம்பர் 24 ல் இராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பாக அரண்மனை முன்பாக எம்ஜிஆரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி நகர் செயலாளர் தலைமையில் நகர் செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் உட்பட அதிமுக, மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment