இராமநாதபுரம் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கை SDPI கட்சியினர் முற்றுகை - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, November 7, 2024

இராமநாதபுரம் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கை SDPI கட்சியினர் முற்றுகை

 


இராமநாதபுரம் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கை  SDPI கட்சியினர் முற்றுகை


 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் SDPI கட்சி சார்பாக சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து  நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தலைமையில் அண்ணா சாலை அருகில் உள்ள ஜெகன் திரையரங்கம் முற்றுகை நடைபெற்றது,


முற்றுகை போராட்டத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல் கண்டன உரையாற்றினார் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் முஹைதீன் கண்டன கோஷம் எழுப்பினார் மேலும் முற்றுகை போராட்டத்தில் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் சுலைமான் மாவட்ட செயலாளர்கள் நஜ்முதீன், ஆசாத் இராமநாதபுரம் நகரத் தலைவர் ஹக்கீம் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொகுதி நகர் நிர்வாகிகள் செயல்வீரர்கள் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad