இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குண்டுக்கரை அருள்மிகு ஸ்ரீமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது.
இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான குண்டுகரை அருள்மிகு ஸ்ரீமுருகன் கோவில் கந்தசஷ்டி விழா இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. பத்மாசூரன் பல முகத்துடன் வலம் வந்து பின் ஆணவத்தோடு தனது சுயரூபத்துடன் வந்த சூரபத்மனை புறமுதுகிட்டு ஓட செய்து கந்தன் தனது வெற்றி வேல் கொண்டு சூரனை சம்ஹாரம் (வதம்)செய்யும் காட்சி நடைபெற்றது, கூடி நின்ற
பக்தர்கள் வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டனர், இவ்விழாவில் இராமநாதபுரம் சமஸ்தானம் ராணி திருமதி.R.B.K.ராஜேஸ்வரி நாச்சியார் அவர்கள் சுற்று வட்டார பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானவர்கள் சூரசம்ஹார விழா, நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment