பரமக்குடி வந்த வைகை தண்ணீர் வைகை,அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பரமக்குடி விவசாயப் பாசனத்திற்கு வந்தடைந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார பகுதிகளின் விவசாய பாசனத்திற்கான வைகை ஆற்று தண்ணீர் பரமக்குடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்றடைகின்றது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும், பரமக்குடி எமனேஸ்வரம் பாலத்தின் வழியாகதான் வைகை ஆறு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுவதற்கு சென்றடைகிறது. தண்ணீர் செல்லும் வழியில் காட்டு கருவை மரங்கள் செடிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன இவைகளை அகற்றி நீர்நிலைகளை தூர்வாரப்பட்டால் தாமதம் இன்றி அனைத்து பகுதிக்கும் தண்ணீர் சீராக கிடைக்கும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment