இராமநாதபுரம் புள்ளியியல் துறையின் மூலம் வடிவமைக்கபட்ட மாவட்ட புள்ளியியல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் , வெளியிட்டார் .
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (12.11.2024) புள்ளியியல் துறையின் மூலம் வடிவமைக்கப்பட்ட மாவட்ட புள்ளியியல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.
இக்கையேட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தின் மக்கள் தொகை, வேளாண்மை. நீர்பாசனம், கால்நடை பராமரிப்பு, மின்சாரம், சுகாதாரம், கல்வி, மீன்வளம், தொலைத்தொடர்பு, உள்ளாட்சி, போக்குவரத்து, மாவட்ட வருவாய் மற்றும் அனைத்துத்துறை அலுவலகங்களின் தரவுகள் 47 தலைப்புகளின் கீழ் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவ்விபரங்கள் யாவும் மாவட்ட தகவலியியல் மையம் (NIC)மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இக்கையேட்டினை மாவட்ட தகவல் மைய இணையதள முகவரியில் பார்வையிடலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பள்ளிஇயல் துணை இயக்குநர் திரு.கா.ஜெய்சங்கர் அவர்கள் மற்றும் புள்ளிஇயல் அலுவலர் திரு.பத்மநாதன் அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment