இராமநாதபுரம் நகராட்சி . பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.
இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை பகுதி, சாலைத்தெரு,அக்ரஹாரம் தெரு ஆகிய பகுதிகளில் பாதாளச்சாக்கடை குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு மற்றும் அடைப்புகள் சரிசெய்யப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்கவும் மற்றும் கழிவுநீர் தெருக்களில் வராத வகையில் உடனுக்குடன் சீரமைத்திட வேண்டுமெனவும் நகராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார். ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் திருமதி.பாண்டீஸ்வரி அவர்கள் நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.
No comments:
Post a Comment