ஏர்வாடி பகுதியில் அந்தரத்தில் உடைந்து தொங்கும் மின்கம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உட்பட்ட ஏர்வாடி தர்கா சேர்மன் தெரு பகுதியில் எஸ் எஸ் 4 டிரான்ஸ்பார்மர் அருகில் கடந்த 06ம் தேதி கனரா வாகனம் மண் ஏற்றி பாதையில் செல்லும் பொழுது மின்கம்பம் மீது மோதியதில் உடைந்து மின்கம்பம் அந்தரத்தில் தொங்குகிறது கம்பத்தை மாற்றுவதற்கு செலவாகும் தொகையை கனரா வாகன உரிமையாளரிடம் மின்வாரியம் பெற்றுக் கொண்டது கடந்த 07ம் தேதி அன்று புதிய மின்கம்பம் மட்டும் உண்டப்பட்டது இன்று வரை உடைந்த மின் கம்பத்தை அகற்றப்படாமல் ஆகாயத்தில் தொங்கும் மின்கம்பம் விபத்து ஏற்படுவதற்கு முன் உடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தில் மின் வயர்களை சரி செய்து மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment