இராமநாதபுரம் கூட்டுறவு துறையின் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 1137 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீடுட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, November 19, 2024

இராமநாதபுரம் கூட்டுறவு துறையின் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 1137 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீடுட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

 


இராமநாதபுரம் கூட்டுறவு துறையின் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 1137 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீடுட்டில் அரசின்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,


இராமநாதபுரம் இன்று(19.11.2024) கூட்டுறவுத்துறையின் மூலம் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவிற்கான கொடியினை ஏற்றிவைத்து பேசுகையில், கூட்டுறவே நாட்டு உயர்வு என்ற பழமொழிக்கேற்ப கிராமப்புற விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பொருளாதார முன்னேறத்திற்கு பாலமாக இருந்து வரக்கூடியது கூட்டுறவு சங்கங்கள் ஆகும். அனைத்து கிராம பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான பொருளாதார கடன் உதவிகள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. அதிலும் விவசாயிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வேளாண் இடுபொருட்கள் வழங்குவதன் மூலம் விவசாய பணிகளை முழுமையாக மேற்கொண்டு விவசாயிகள் பயன் பெறுவதற்கு கூட்டுறவு சங்கங்கள் பெரும் பங்களிக்கிறது. அதைப்போல் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் குறைந்த வட்டியில் நகை கடனுதவிகள் வழங்கப்படுகிறது. மகளிர்களுக்கு சுழல் நிதி கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும் கறவை மாடு, ஆடுகள் மானிர திட்டத்தில் வழங்குவதற்கான கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது.இது போல் கிராம பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அரசு நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய கூட்டுறவு சங்கங்கள் உறுதுணையாக இருந்து வருகின்றன.


அந்த வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வாரவிழா நடத்தப்படுகின்றது. இதன் மூலம் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடைவதற்கான பணிகள் விரைவுப்படுத்துவது மட்டுமின்றி தனிநபர் பொருளாதார மேம்பாட்டிற்கான உதவிகளையும் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.51 கோடி மட்டும் கடனுதவி வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் ரூபாய் 400 கோடி கடனுதவி வழங்கி உள்ளதாகவும் மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களும் சீரமைக்க போதிய நிதி வழங்க உத்தரவு. அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் பல திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.


பயனாளிகளுக்கு 10.20  கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின்  மண்டல இணைப்பதிவாளர் திருமதி.ஜுனு அவர்கள் , மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திரு.மனோகரன் அவர்கள், இராமநாதபுரம் நகர்மன்றத்தலைவர் திரு.ஆர்.கே.கார்மேகம் அவர்கள், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் திரு.பிரபாகரன் அவர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.வேலுச்சாமி அவர்கள், இராமநாதபுரம் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.டி.ஆர்.பிரவின் தங்கம் அவர்கள், பால்வளத்துறை துணைப்பதிவாளர் திருமதி.புஷ்பலதா அவர்கள், கூட்டுறவு பயிற்சி நிலைய முதல்வர் திரு.ரகுபதி அவர்கள், துணைப்பதிவாளர் திரு.மணிகண்டன் அவர்கள் நகர்மன்ற உறுப்பினர் திரு.குமார் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad