இராமநாதபுரம், நவ.19 மண்டபம் பகுதியில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 4.5 கிலோ, கடத்தல் தங்கம் பிடிபட்டது,
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை பகுதிகளில் தொடர்ந்து இலங்கையில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.
நேற்று (18.11.2024)இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரபடுவதாக மத்திய வருவாய் புலணாய்வு பிரிவு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உச்சிப்புளிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மத்திய வருவாய் புலணாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் அந்த அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில்
அந்த காரில் 4.5 கிலோ தங்கக் கட்டிகள் இருந்துள்ளது . (இதன் மதிப்பு 3.கோடிக்கு மேல் இருக்கும் )தங்கத்தை கைப்பற்றி, காரில் வந்த இராமநாதபுரத்தை சேர்ந்த செய்யது இப்ராஹிம், மண்டபத்தை சேர்ந்த நாசர் ஆகிய இருவரையும் கைது செய்த மத்திய புலணாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து. இராமநாதபுரம் இராமேசுவரம் மண்டபம் பகுதியில் கடத்தல் தங்கம், பிடிபட்டுக்கொண்டு இருகிறது. தங்கம் போதை பொருள்கள், தொடர்ந்து கடத்தல் நடைபெற்றுக்கொண்டும் இருக்கிறது.
No comments:
Post a Comment