இராமநாதபுரம் நவ.16 புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, November 16, 2024

இராமநாதபுரம் நவ.16 புதிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம்

 


இராமநாதபுரம் நவ.16 புதிய வாக்காளர் பட்டியல் பெயர்  சேர்ப்புக்கான சிறப்பு முகாம்  இன்று (16.11.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்


 இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்போர் உரிமைகள் நலச்சங்க மெட்ரிக் பள்ளியில் இன்று (16.11.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள்  வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு  நடைபெற்றதை பார்வையிட்டு தெரிவிக்கையில்


இந்தத் தேர்தல் ஆணைய அறியுறுத்தலின்படி 2025 ஜனவரி 1- ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயரை சேர்க்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நவம்பர் மாதம் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு தோறும் நடைபெறுகின்றன. இம்முகாமில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல்,நீக்கல்,முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தவறாமல் முகாமில் பற்கேற்று விண்ணப்பங்கள் வழங்கிட வேண்டும். அதே போல் திருத்தம், நீக்கம்  குறித்து விண்ணப்பித்தவர்களும்,  விண்ணப்பித்து சரிசெய்துகொள்ள  வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad