இராமநாதபுரம் ; ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருத்தேர்வளை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன் ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், நலத்திட்ட உதவிகளை வழங்கி வேளாண்மைத்துறையின் மூலம் விளைநிலங்கள் டிஜிடல் முறையில் பதிவு செய்வதை பார்வையிட்டும், மரக்கன்றுகளை நடவு செய்தார்கள். இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்கள் திரு.அமர்நாத் அவர்கள், திரு.நாகராஜன் அவர்கள் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவ,மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment