இராமநாதபுரம், அருகே இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்த சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் சிலைக்கு மரியாதை செய்யபட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் உள்ள முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்களின் 223 வது குருபூஜை விழா நடைபெற்றது இதில் சமுதாய தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஊர் பெரியோர்கள் ஜமாத்தார்கள்,சமூக ஆர்வலர்கள் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மருது சகோதரர்கள் தூக்கில் போடப்பட்ட அக்டோபர் 24 ல் அன்று சிலைக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தும் அன்னதானம் செய்தனர்
விழா எற்பாடுகளை வாலாந்தரவை ஊர் தலைவர் சு.தர்மம் மற்றும் கிராம இளைஞர்கள் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment