இராமநாதபுரம் மகளிர் இலவசமாக பயண செய்யும் அரசு நகர் பேருந்து சக்கர கழன்று விபத்து ஏற்படுத்துவதற்கு முன் தடுத்து நிறுத்தப்பட்டது
இராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டிணம் சென்ற 4D அரசு நகர் பேருந்து குமரையா கோயில் நிறுத்ததில் இருந்து பாரதிநகர் செல்லும் வழியில் பஸ் பின் பகுதி வலது புறம் சக்கரத்தில் இருந்து ஒவ்வொரு நட்டுகளும் கழன்று விழுந்து ஓடியதால் மீதமுள்ள மூன்று நட்டுகளும் கழறும் தருவாயில் பேருந்து செல்வதையும் சக்கரம் ஆடுவதையும் கவனித்த பேருந்தின் பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் பஸ் ஓட்டுநர் இடத்தில் சக்கரம் கழன்று விழும் நிலையில் உள்ளதை கையதைத்து ஓட்டுநர் இடத்தில் தெரிவிக்கவே, ஓட்டுநர் உடனடியாக பேருந்தை பாரதிநகர் பேருந்து நிறுத்ததில் நிறுத்தினார் இதனால் பெரும் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது.
பேருந்தில் வந்த பயணிகள் அனைவரையும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர்
ஓட்டுநர் பணிமனைக்கு தகவல் தெரிவிக்கவே. பணிமனையில் இருந்து வந்து மெக்கானிக் நட்டுகள் எடுத்து வந்து சரி செய்து பின்பு பணிமனைக்கு பேருந்து எடுத்து செல்லப்பட்டது இது போன்று பல பேருந்துகள் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்பதாகவும் பயணம் செய்த பயணிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment