இராமநாதபுரம் ஏர்வாடி அருகே பைக் நிலை தடுமாறி பாலத்தில் மோதியதில் விவசாயி உயிரிழப்பு
இராமநாதபுரம் மாவட்டம் கொம்பூதி கிராமத்தை சேர்ந்த செந்தில்வேல் என்பவரின் மகன் முருகன் வயது 55 இவர் ஏர்வாடியில் இருந்து ஆடுக்குட்டி ஒன்றை வாங்கி கொண்டு பதிவு எண் இல்லாத இரண்டு சக்கர வாகனத்தில் ஏர்வாடியில் இருந்து கோம்பூதி நோக்கி செல்லும் போது
மடியில் வைத்திருந்த ஆட்டுக்குட்டி நலுவியதை பிடிக்க மூர்ப்பட்டதில் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது பக்கத்தில் இருந்த தரை பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதுஇதில் முருகன் என்பவருக்கு முன் தலையில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இறந்தவரின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment