இராமநாதபுரம் அம்மா பூங்காவில் "தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ் பிளாஸ்டி பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பை பயன்படுத்துவோம் நிகழ்ச்சி
இன்று 01.10.2024 17- செப்டம்பர் முதல் அக்டோபர் 01 வரையில் தூய்மை இந்தியா" திட்டத்தின் கீழ் இந்திய அரசு நேரு யுவகேந்திரா, கலைபண்பாட்டுத்துறை இராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் மாவட்ட மல்லர் கம்பன் கழகம் இணைந்து நடத்திய "தூய்மை இந்தியா நிகழ்ச்சி " பட்டணம்காத்தான் அம்மா பூங்காலில் இன்று 01.10.2024 காலை 07.மணியளவில் நடைபெற்றது. சிம்ப ஆசிரியர் திரு.இராமமூர்த்தி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்,இதில் ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நா.சுந்தரமூர்த்தி அவர்கள் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் சம்பந்தமான பொருள்களை எடுத்து சுத்தம் செய்தார்கள், மக்கள் பை அனைத்து பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது, அதைபோல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற சிலம்ப ஆசிரியர் ஆகாஷ்,கலை பண்பாட்டுத்துறை நாட்டுப்புற கலைப்பயிற்சி மையத்தின் சிலம்ப ஆசிரியர் திரு தனசேகரன்,மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் திரு.சரவணன், வருசைகனி,ஹரிஷ்ராகும்,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆற்றுனர் திரு.சத்தியேந்திரன் மற்றும் நேருயுவகேந்திரா சேவை தொண்டர்கள் பரமேஸ்வரன், பால்பாண்டியன், முனீஸ்குமார் ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள், 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின் முடிவில் இராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் திரு.மு.லோகசுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment