இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்
இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை சத்யா மருத்துவமனை எதிராக இன்று அதிகாலையில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகவும் சிரமம் அடைந்தனர், முன்னால் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஜயக்குமார் அவர்கள் பணியில் இருந்தபோது நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு. மழை நீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து கொடுத்தார்கள்
தற்போது அந்த சிமெண்ட் கால்வாய்களை தனியார் நிறுவனங்கள் ஆக்கிமிப்பு செய்து கழிவுப் நீர் திறந்து விடுவதால் தற்போது ஊரணியும் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவர் இடத்தில் பலமுறை மக்கள் முறையிட்டும் எந்த பயனும் இல்லாமல் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்றி மழை நீர் நீர் நிலையை தூர்வாரி பருவ மழை நீரை சேமிப்பு செய்யவேண்டும் என்பதே பலரின் கருத்து.
மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க ஏற்பாடுகள் செய்யுமா என எதிர்பார்ப்போம்.
No comments:
Post a Comment