இராமநாதபுரம் அக்.03 காவிரி குடிநீர் வராவிட்டால் சாலை மறியல் போராட்டம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, October 3, 2024

இராமநாதபுரம் அக்.03 காவிரி குடிநீர் வராவிட்டால் சாலை மறியல் போராட்டம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

 


இராமநாதபுரம் அக்.03 காவிரி குடிநீர் வராவிட்டால் சாலை மறியல் போராட்டம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் 


 அக்.2 காந்தி ஜெயந்தி விழா கிராம சபை சிறப்பு கூட்டத்தில் பொதுமக்களின் குடிநீர்  தேவைக்காக  எடுக்கப்பட்ட முடிவுகள்


இராமநாதபுரம் மாவட்டம்  மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி யில்  சிறப்பு கிராமசபைக்கூட்டம் 


ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது.மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார், உதவி இயக்குநர் தணிக்கை ஏழுமலையான் சிறப்பு அதிகாரியாக கலந்துகொண்டு கூட்டத்தை நடத்தினர்,


கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் காவிரி கூட்டு குடிநீர் பல மாதங்களாக வரவில்லை என்றும் உடனடியாக காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்,


இதற்கு பதிலளித்து பேசிய ஊராட்சி மன்ற தலைவர் சித்ராமருது அவர்கள் பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதிகளில் காவிரி குடிநீர் பல மாதங்களாக சப்ளை செய்யபடவில்லை என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தொடர்ந்து அதிகாரிகள் இடத்தில் பேசி வருவதாகவும் விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கைகள் எடுப்போம் என தெரிவித்தார். இதனை கேட்ட ஆண்களும் மகளிர் களும் காவிரி குடிதண்ணீர் மாவட்டத்தில் பாரபட்சமாக சப்ளை செய்யபடுவதாகவும் மற்ற பகுதிகளில் சீராக தண்ணீர் கிடைப்பதாகவும் நமக்கு மட்டும் அதிகாரிகள் குடிநீர் சப்ளை செய்வதில்லை எனவும் இதற்கு நமது ஊராட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு காவிரி குடி நீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து சாலைமறியல் உள்ளிட்ட மாபெரும் போராட்டம் நடத்த வேண்டும் இதற்கு ஊராட்சி நிர்வாகம் துணை நிற்க வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக கிராம சபை கூட்டத்தில் குரல் எழுப்பினர்.


இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சித்ராமருது, மற்றும் மண்டபம் யூனியன் கவுன்சிலர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் ஆகியோர் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கவேண்டும் என்று தினமும் போராடி வருவதாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் ஓரிரு நாளில் காவிரி குடிநீர் சப்ளை செய்யாவிட்டால் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று உறுதி அளித்தனர்.


கூட்டத்தில் சாத்தான்குளம் பகுதியில் மின்கம்பம் அமைப்பது. பட்டிணம்காத்தான் பள்ளி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது. காவிரி குடிநீர் சீராக கிடைக்க செய்வது  பட்டிணம்காத்தான் முழுவதும் கதவு எண்களை வரிசைப்படுத்துவது அனைவரையும்  பள்ளியில் கல்வி கற்க நடவடிக்கை எடுப்பது அனைத்து குடியிருப்புகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் கிடைக்கச் செய்வது பள்ளிகளில் குடிநீர் தொட்டு அமைப்பது ஓம் சக்தி நகர் தொடக்கப் பள்ளியில் கலையரங்கம் அமைப்பது போன்ற 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத் மற்றும் உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக  கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad