இராமநாதபுரம் அக்.24 பரமக்குடி சித்தர் கூடம் களப்பணி நண்பர்கள் சார்பாக பனை விதைகள் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.10.2024) அன்று பரமக்குடி வைகையாற்றின் தென்கரையோரம் புறவழிச்சாலை அருகே பனைவிதை விதைக்கும் சித்தர் களப்பணி சித்தர்கூடம் பரம்பை களப்பணி நண்பர்கள் குழுவினர் மேற்கொண்டனர்.
வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பரமக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஊரணி,குளம், கண்மாய் கரைகளில் தொடர்ந்து மரக்கன்று, பனைவிதைகள் நட்டுவைத்து மண் வளம், பனை வளங்களை காத்து வளர்த்து வருகின்றனர். அழிந்து வரும் பனை மரங்களை பாதுகாத்து முன்னெடுத்து வரும் இவர்களின் செயல்பாடுகளை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
No comments:
Post a Comment