இராமநாதபுரம் சிறப்பாக காவல்துறையில் பணியாற்றி மறைந்த மோப்ப நாய் 'புளோரா'வுக்கு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யபட்டது, - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, October 24, 2024

இராமநாதபுரம் சிறப்பாக காவல்துறையில் பணியாற்றி மறைந்த மோப்ப நாய் 'புளோரா'வுக்கு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யபட்டது,


இராமநாதபுரம் சிறப்பாக காவல்துறையில் பணியாற்றி மறைந்த மோப்ப நாய் 'புளோரா'வுக்கு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யபட்டது,

 

காவல்துறையில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாகப் புலனாய்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புகளுக்கென்று காவலர்கள் உள்ளனர். இது தவிர்த்து மனிதனின் எண்ணத்திற்கு எட்டாத குற்றச் சம்பவங்களை நுண்ணிய மோப்ப சக்தியாலும், பேரழிவை ஏற்படுத்துகிற வெடிகுண்டுகளைக் கண்டுபிடிப்பதற்கும் மோப்ப நாய்களின் பிரிவு இருக்கின்றன. கூர்மையான பயிற்சிக்குப் பின்னரே இந்த மோப்ப நாய்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. இதில் தீவிரமாகச் செயல்பட்டது இராமநாதபுரம் மாவட்டத்தின் வெடிகுண்டு தடுப்புப் பிரிவிலுள்ள 'புளோரா'. ஐந்தறிவுப் பிராணி என்றாலும் அதன் நுண்ணிய திறமை ஐந்தறிவையும் தாண்டியது. வெடிகுண்டு வழக்குகள் குற்றச் சம்பவங்களில் தன்னுடைய மோப்ப சக்தியால் பல குற்றச் சம்பவங்களின் புலனாய்வுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது டயானா அப்படிப்பட்ட மோப்பத் திறன் கொண்ட புளோரா நேற்று (23.10.2024) உயிரிழந்தது. போலீஸில் பணியாற்றினாலும், அதுவும் சக உயிர்தானே; வாயில்லா ஜீவன் போன்று பார்க்கவில்லை. எங்களின் அங்கம் தான் புளோரா. அதை எங்களின் தோழனாகவே பாவித்து வந்தோம். பிரித்துப் பார்க்கவில்லை எனக் கண்கள் கசியச் சொல்கிறார்கள், புளோராவைப் பராமரிக்கிற வெடி குண்டுத் தடுப்புப் பிரிவு காவலர்கள்.


புளோரா இறந்ததும் உரிய சடங்குகளுடன் அடக்கம் செய்தனர் காவலர்கள். புளோராவின் நல்லடக்கம் முறைப்படி போலீஸ் மரியாதையோடு காவலர்களின் 21 குண்டுகள் முழங்க இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினரின் மலரஞ்சலி செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad