இராமநாதபுரம் திருப்புலாணி ஸ்ரீஆதிஜெகநாத பெருமாள் ஆலயத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் ஒரு மணிநேரம் காத்திருப்பு
இராமநாதபுரம் திருப்புலாணி , ஆதி ஜெகநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும் இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் தர்பசனம் சேதுகரை அமைந்துள்ளது இங்கே வரும் பக்தர்கள் கடலில் நீராடி பின்னர்
ஸ்ரீஆதிஜெகநாதர் பெருமாளை வணங்கி செல்வது வழக்கம், இன்று 28.09.2024 புரட்டாசி சனிக்கிழமை இரண்டாவது வாரம் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் திரண்டனர், ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். இங்கு
போதிய பாதுகாப்பு இருந்தும் சரியான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்ய போதிய ஏற்பாடுகள் சரியாக செய்யவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் அடுத்த வாரம் சனிக்கிழமை முதியோர் குழந்தைகள் சிரமமின்றி தரிசனம் செய்ய முன்னேற்பாடுகள் செய்து தரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment