இராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, September 21, 2024

இராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு


இராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு


இராமநாதபுரம் நகராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்,

 

அளித்தபின் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் கூறியதாவது

 

இராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்தப்படவில்லை.இராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால், இராமநாதபுரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  வசித்து வரும் ஏழை குடும்பங்களிலுள்ள மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களை  நகரிலுள்ள தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால், ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


நகராட்சியில் பெண்களுக்கென்று தனியான நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது, ஆனால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால்,கல்விக் கட்டணம் செலுத்தி படித்து வரும் மாணவர்கள், பள்ளிக் கல்வியை முழுவதும் முடிக்காமல் இடைநிற்றல் ஏற்பட வாய்ப்பும் உள்ளது.


அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற  அடிப்படையில் தமிழ்நாடு அரசு உயர்கல்வி படிக்க  7.5% இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இராமநாதபுரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை மாணவர்கள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வருவதால் அம்மாணவர்களுக்கு அரசு வழங்கும் 7.5% இட ஒதுக்கீடு பொருந்துவதில்லை.இதனால் அப்பகுதி மாணவவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து வருகின்றனர். எனவே,இராமநாதபுரம் நகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழை மணாவர்களும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திட,  இராமநாதபுரம் நகராட்சியில் இயங்கி வரும் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, அடுத்த ஆண்டுகளில், அதனை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, இராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஏற்படுத்தி தரவேண்டி இன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச்செயலாளர் சிவபாலன், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் இராமலிங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைச்செயலாளர் சரவணன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச்செயலாளர் லிங்கதுரை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்டச்செயலாளர் சொக்கநாதன் மற்றும் பலர்  கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad