இராமநாதபுரம் ரூ.25.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் திறந்து வைக்கபட்டது
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் இன்று 20.09.2024 ரூ.25.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்கள் திறந்து வைத்தார்
இந்நிகழ்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.முருகேசன் அவர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர்கள் திரு.கேசவன் அவர்கள் திரு.முருகன் அவர்கள் உதிவி கோட்ட பொறியாளர் திரு வெற்றிவேல் ராஜன் அவர்கள் திரு.கண்ணன் அவர்கள் இராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் திரு.R.K.கார்மேகம் அவர்கள் இராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவர் திரு.K.T.பிரபாகரன் அவர்கள் இராமநாதபுரம் நகர் மன்ற துணைத்தலைவர், திரு.T.R..பிரவின் தங்கம் அவர்கள் உதவி பொறியாளர்கள் திரு.சையது முகம்மது அவர்கள் திரு.கணேஷ் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அரசியல் கட்சினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment