ஹல்மெட், மாஸ்க் போட்டு வழிப்பறி மற்றும் செயின் திருடர்கள் கைது செய்யபடுவார்களா
இராமநாதபுரம் தாயுமான சுவாமி கோவில் தெருவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் இரண்டு நபர்கள் ஹெல்மெட் மாஸ்க், அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் சென்று நோட்டமிட்டு வீட்டின் வாசலில் நின்றிருந்த பெண்மணியிடம் முகவரி விசாரிப்பது போல யாரும் இல்லாத மாலை நேரத்தில் தனது
கைகுட்டையில் வைத்து இருந்த பொடியை தூவி கீழே தள்ளி விட்டு கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்று விட்டார்கள்
இதுபற்றிய தகவல் அறிந்த கேணிக்கரை காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் cctv கேமரா பதிவுகளை ஆய்வு செய்து நம்பர் பிளேட் இல்லாத பல்சர் பைக்கில் தப்பி சென்ற செயின் திருடர்கள் இரண்டு நபர்களையும் தேடி வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் யாராக இருந்தாலும் முகவரி விசாரித்து வருகிற நபர்களை புறக்கணிப்பது நல்லது.என அறுவுருத்தபடுகிறது.
இராமநாதபுரம் நகர் பகுதிகளில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்களை காவல்துறையினர், பறிமுதல் செய்து அபராதம் விதித்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் எனவும் தொடர்ந்து போதை பொருள்கள் இளைஞர்கள் இடத்தில் அதிகம் பரவி வருவதாகவும் குற்றம்சாட்டபடுகிறது.
காவல்துறை விரைந்து செயினை பறித்து சென்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கபடுகிறது.
No comments:
Post a Comment