இராமநாதபுரம் கிராமிய கலை நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு,
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் மூலம் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான மாவட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம்,கிராமிய நடனம், கருவிசை மற்றும் ஓவியம் ஆகிய பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றன
அதன்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப பள்ளியில் 09.01.2024 & 10.03.2024 ம்தேதி அன்று 5 பிரிவுகளில் மாவட்ட கலைப்போட்டிகள் நடைபெற்றது இதில் கிராமிய நடனம் நிகழ்ச்சியில் மாணவன் லோ.ஆகாஷ் நடன கலை இலக்கிய நிகழ்ச்சியில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார் மாணவனுக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜித் சிங்காலோன் இ.ஆ.ப.,அவர்கள் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
No comments:
Post a Comment