இராமநாதபுரம் புதிய மேம்பாலம் திறப்பு விழா
எட்டு ஆண்டுகள் பணிகள் நடைபெற்ற மேம்பாலம் நாளை 20.09.2024 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுகிறது
இராமநாதபுரம் சக்கரக்கோட்டை ரயிவே மேம்பாலம் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முயற்சியில் தொடங்கப்பட்டது இடையில் நிலம் கையகபடுத்துதல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது பின்னர் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்து நிலையில் கடந்த ஆண்டில் பணிகள் முடிக்கபட்டு பாலம் திறக்கபடால் இருந்து வந்தது
இதை பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திறக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்,
இந்த நிலையில் நாளை 20.09.2024 முதல் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கபடுகிறது.
இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்வதற்கு ஏழு கிலோமீட்டர் சுற்றி வருவது குறையும் எனவும் இந்த ரயில்வே மேம்பாலம் திறப்பதால் ரயில்வே கேட்டில்
ரயில்கள் செல்லும்வரையில் வாகன ஒட்டிகள் காத்திருக்க வேண்டியதில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment