பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு இணைந்து நடத்திய பாராட்டு விழா...
இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் திருமதி எஸ்தர் வேணி அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி ரெங்கநாயகி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு எம்.சோமசுந்தரம், துணைத் தலைவர் திரு கோ.நாராயணன், சக்கரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி யாழினி புஸ்பவள்ளி, திரு கவிஞர் ராமனாதன்,சாரணர் இயக்கம் மாவட்டச் செயலாளர் திரு சிவாசெல்வராஜ்,
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் திரு C வெற்றிவேல்,திரு நிஜாம், திரு கா.பாஸ்கரன் திருமதி சங்கீதா, திருமதி ஈதுல்பாயிஷா, திருமதி சுமையாபானு உட்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
நிறைவாக நல்லாசிரியர் திருமதி தே.எஸ்தர்வேணி அவர்கள் ஏற்புரை ஆற்றினார் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி எஸ்.சபினா அம்மாள் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment