ஏர்வாடி பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க இரண்டாம் கட்ட மருந்து தெளிக்கும் பணி துவங்கியது - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, September 2, 2024

ஏர்வாடி பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க இரண்டாம் கட்ட மருந்து தெளிக்கும் பணி துவங்கியது


ஏர்வாடி பகுதிகளில் மலேரியா காய்ச்சலை  பரப்பும் கொசுக்களை ஒழிக்க  இரண்டாம் கட்ட மருந்து தெளிக்கும் பணி துவங்கியது


கீழக்கரை மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க  ஏர்வாடி பகுதிகளில்  சுகாதாரத்துறை சார்பில்  வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிக்கும் பணி துவங்கியது.


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் கடற்கரையை ஒட்டி உள்ள ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல் மாரியூர், பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை முற்றிலும் ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை வீடு வீடாக சென்று  கொசு மருந்து  தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது.


அதன்படி முதல் கட்டமாக கடந்த ஜீன் மாதம்  கொசு மருந்து தெளிப்பு பணி நடைபெற்றது, அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன்  அவர்களின்  உத்தரவுப்படி  பரமக்குடி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் இந்திரா, கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், ஆகியோரின் ஆலோசனைப்படி, நேற்று சின்ன ஏர்வாடி  பகுதிகளில் கொசுமருந்து தெளிக்கும் பணியினை ஏர்வாடி ஊராட்சி மன்றத் தலைவர் செய்யது அப்பாஸ் துவக்கி வைத்தார்.


30 நாட்கள் நடைபெறும் இந்த கொசு மருந்து தெளிப்பு பணியில் 30 பணியாளர்கள்  ஈடுபட்டுள்ளனர்.இவர்களோடு இணைந்து டெங்கு  கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு வீடாக சென்று  தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


நேற்று துவங்கிய இப்பணிகளை விருதுநகர் மண்டல பூச்சியியல் வல்லுநர் வரதராஜன், மாவட்ட மலேரிய அலுவலர் ரமேஷ், இளநிலை பூச்சியியல் வல்லுநர்கள்  பாலசுப்பிரமணியன், மணிகண்டன், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்கள்.


இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அழகுசுந்தரம், பூமிநாதன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர்,பாலமுருகன், இஜாஜ், வெங்கடேசன், சிதம்பரம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad