ஆன் லைன் வேலை வாய்ப்பு (மோசடி)பகுதி நேர வேலைக்காக பணத்தை இழந்தவர் மீட்டுக் கொடுத்த காவல்துறையினர்.
ஆன்லைன் PART TIME JOB மோசடியில் இழந்த ரூ.95,000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர்.
இராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தன்னுடைய Whatsapp எண்ணிற்கு Part Time Job மூலம் தினமும் ரூ.3000 முதல் ரூ.8000 வரை சம்பாதிகலாம் என்று வந்த குறுஞ்செய்தியை உண்மையென நம்பி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.95000/- பணத்தை முதலீடு செய்துள்ளார். இதன் பிறகு தனக்கு லாபமாக வந்த பணத்தை எடுக்க முடியாமல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்தார். லெனின் அவர்கள் அளித்த புகாரின் போில் இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இப்புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, ரூ.95,000/- பணத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS,., அவர்கள் முன்னிலையில் லெனின் அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
No comments:
Post a Comment