இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றம்,
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் கலோன்,இ.ஆ.ப.,அவர்களின் உத்தரவின் பேரில் இன்று 08.08.2024 இராமநாதபுரம் கீழக்கரை சாலை சந்திப்பு முதல் பட்டணம்காத்தான் E.C.R,சாலை வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் உட்கோட்ட எல்கை வரையில் இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் சாலையின் இருபுறமும் கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதனாலும் இப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை, அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதில் கேணிக்கரை காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், காவலர்கள். உடன் வருவாய் ஆய்வாளர் கோபி கிருஷ்ணன்,கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாத பூபதி கிராம உதவியாளர் ஜெகதீஸ் நெடுஞ்சாலைதுறை கோட்டபொறியாளர் முருகன் உதவி கோட்ட பொறியாளர் பிரேமானந்த் உதவி பொறியாளர் ராஜ்குமார் சாலை ஆய்வாளர்கள் சரவணன், ராமசந்திரன், ராஜேந்திரன், மற்றும் ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலைதுறை உழியர்கள், பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி ஊழியர்கள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment