இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் தொடர்ந்து இனோவா காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற நபர்களை கைது செய்த இராமநாதபுரம் காவல்துறை,
CCTV கேமராக்கள் ஆய்வு செய்ததின் மூலம் ஆடு திருடிய நபர்களை இராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் கைது செய்தனர்
இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளில் தொடர்ந்து கார்களில் சென்று ஆடுகளை திருடி வரும் நபர்களைக் கண்டறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ் தலைமையிலான காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு CCTV கேமராக்களை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவலின் அடிப்படையி காரைக்குடியை சோ்ந்த ஆறுமுகம் மற்றும் அராபாத் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட 8 வெள்ளாடுகள், ஆடுகள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ. 1½ லட்சம் பணம் மற்றும் ஆடுகள் திருடுவதற்காக அவர்கள் பயன்படுத்திவந்த TN01AC8499 Innova வாகனம் ஆகியவற்றை கைப்பற்றியும் . மேலும் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த கேணிக்கரை சார்பு ஆய்வாளர் திரு.தினேஷ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment