இராமநாதபுரம் அமிர்தா வித்யாலயாவில், அமிர்தா மருத்துவமனை குழந்தைகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாம்
இராமநாதபுரம்: அமிர்தா மருத்துவமனை, கொச்சி, ராமநாதபுரம், , அமிர்தா விஷ்வ வித்யாபீடம் குழந்தைகளுக்கான இலவச இதய பரிசோதனை முகாமை இராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை அமிர்தா வித்யாலயாவில் நடத்தியது. 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முகாமில் பங்கேற்றனர்.
முகாமின் போது, இதய அறுவை சிகிச்சை அல்லது பிற சிகிச்சைகள் தேவைப்படும் குழந்தைகள் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் இலவசமாக இந்த சேவைகளை பெறுவார்கள் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாம் ஜெனிசிஸ் அறக்கட்டளை மற்றும் ஹெச்டிஎஃப்சி ஏர்கோவுடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த முகாமை அமிர்தா மருத்துவ கல்லூரி, கொச்சி, குழந்தை இதய மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் டாக்டர் பாலாஜி ஶ்ரீமுருகன், டாக்டர் ப்ரிஜேஷ் பி. கோட்டாயில், டாக்டர் பாலா கணேஷ் மற்றும் டாக்டர் நிஷாந்த் ஆகியோர் நடத்தினர்.
இந்த முகாம் மாதா அமிர்தானந்தமயியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், தமிழ்நாட்டில் நடத்தப்படும் 10வது முகாமாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு விருதுநகர், நாகர்கோவில், மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment