ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான பகுதிநேர நாட்டுப்புற கலைபயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இராமநாதபுரம் ஆக. 11- தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத் துறை சார்பில் மாநிலம் முழுவதும் 25 இடங்களில் பகுதிநேர கலைப் பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர், இந்நிலையில் ஜூலை மாதம் 12-ம் தேதி முதல் இராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தெம்மாங்கு பாட்டு ஆசிரியர் இருளான்டி, கரகாட்ட ஆசிரியர் பாண்டியம்மாள், ஒயிலாட்ட ஆசிரியர் இராமகிருஷ்ணன், சிலம்பாட்ட ஆசிரியர் தனசேகரன் ஆகியோர்கள் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இதில் சிலம்பாட்டத்தில் 58 நபர்களும், ஒயிலாட்டத்தில் 22 நபர்களும், கிராமிய பாடல் 11, கரகாட்டம் 9 மொத்தம் என மொத்தம் 100 மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். மேலும்
கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் இளைஞர்கள் பகுதிநேரமாக கலைப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதற்கு வயது ஒரு தடையில்லை 17-வயது முதல் வயது வரம்பில்லாமல் பயிற்சியல் சேரலாம், 8ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் ஆண்டுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஒயிலாட்டம், கரகாட்டம், கிராமிய பாடல் மற்றும் சிலம்பாட்டம் ஆகிய கலைகளை கற்றுக் கொள்ளலாம் இப்பயிற்சி நிறைவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும், வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை 04.00 மணிமுதல் 06.00 வரைj நடைபெறும் நிகழ்ச்சிகளை மேற்பார்வையாளர் மு.லோகசுப்பிரமணியன் செய்து வருகிறார்.
No comments:
Post a Comment