ஆகஸ்டு 31 ல் இராமநாதபுரத்தில் 18 வயதுக்கு கிழ் உள்ள குழந்தைகளுக்கு இதய நோய் மற்றும் அறுவை சிகிச்சைக்கான. இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இராமநாதபுரம் அருகே உள்ள ஆர் எஸ் மடை அமிர்தா வித்யாலயாவில் பிறவியிலேயே இதயக் குறைபாடுஉள்ள குழந்தைகள் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இதய நோய் பாதிப்பு உள்ளவர்கக்கான மருத்துவம்
கொச்சின் அமிர்தா மருவமனை குழந்தைகள் இருதயக் குழு, ஜெனிசிஸ் அறக்கட்டளை மற்றும் அமிர்தா ஹார்ட் கேர் அறக்கட்டளை இணைந்து இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ சிகிச்சை முகாம் வரும் ஆகஸ்டு 31 ந்தேதி இராமநாதபுரம் ஆர் எஸ் மடையில் உள்ள அமிர்தா வித்தாலயாவில் நடைபெற உள்ளது இதில் இதய நோய்க்கான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும்,
குழந்தைகளுக்கு இதய நோய்கள் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மேல் சிகிச்சை செய்வதற்கு கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அழைத்து வரப்படும், செலவுகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக செய்வதாகவும் சிகிச்சைக்கா முன் பதிவு செய்யவேண்டும் எனவும் இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல பஸ் வசதிகள் ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும்
கேரளா கொச்சியில் உள்ள அமிர்தா மருவமனை குழந்தைகள் இருதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் பாலாஜி ஸ்ரீமுருகன் அவர்கள் தெரிவித்தார்
இராமநாதபுரம் இராமேஸ்வரம், அமிர்தா வித்யாலயம் பள்ளி மேலாளர் லட்சுமி, இராமேஸ்வரம் பள்ளியின் முதல்வர் இந்திராதேவி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன் பதிவு மற்றும் தகவல் தெரிவிக்க தொடர்பு கொள்ள எண்; 8921508515
No comments:
Post a Comment