இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (11.08.2024) அரசு தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா,இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் அரிச்சல் முனை, தனுஸ்கோடி, சுந்தரமுடையான், காரிக்கூட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நகராட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை, மீன்வளத்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜி.சந்தீஷ்,இ.கா.ப., அவர்கள், மாவட்ட வன உயிரின காப்பாளர் திரு.பகான் ஜெகதீஷ் சுதாகர்,இ.வ.ப., அவர்கள், மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment