இராமநாதபுரம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர்கள் கைது.
இராமநாதபுரம் மாவட்டம் பட்டனம்காத்தான் பிரிந்தாவனம் கார்டன் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 120 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடப்பட்டது தொடர்பாக கேணிக்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்போில் இராமநாதபுரம் உட்கோட்ட குற்றப்பிரிவினர் மாரியப்பன், பால்சாமி, சாத்தையா மற்றும் முகமது காசிம் ஆகிய நான்கு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 120 கிராம் வெள்ளிப்பொருட்களை கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த நான்கு நபர்கள் 19.07.2024 அன்று மதுரை கீழவளவு காவல்நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளளூர் கிராமத்தில் திருடிய ரூபாய் 1,01,250/- மதிப்பிலான நகையையும் மீட்டு மதுரை கீழவளவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்த இராமநாதபுரம் உட்கோட்ட குற்றப்பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment