இராமநாதபுரம் ரயில்வே மேம்பாலம் திறப்பு எப்போது ? எதிர்பார்பில் பொதுமக்கள் - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, July 28, 2024

இராமநாதபுரம் ரயில்வே மேம்பாலம் திறப்பு எப்போது ? எதிர்பார்பில் பொதுமக்கள்

 


இராமநாதபுரம் ரயில்வே மேம்பாலம் திறப்பு  எப்போது ? எதிர்பார்பில்   பொதுமக்கள் 


இராமநாதபுரம் ரயில்வே மேம்பாலம் 2017 ம் ஆண்டு பணிகள்  துவங்கப்பட்டு நிலம் கையகபடுத்துதல் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து  பாலத்தின் நீளம் அளவு குறைக்கப்பட்டு அதன்  பணிகள் நடைபெற்று கடந்த ஆண்டு முடிந்த நிலையில்   இன்னும்  இந்த ரயில்வே  மேம்பாலம் திறக்கப்படாமல் உள்ளது 


 இராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள  சக்கரக்கோட்டை ரயில்வே கேட்  மேம்பாலம் இந்த பாலம் பழைய பேருந்து நிலையம் (தற்போது புறநகர் பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது) இதன் முதல் சக்ரக்கோட்டை வரையில் அமைக்கப்பட்ட 

 

இந்த ரயில்வே கேட் மேம்பாலத்தின் வழியாக , கீழக்கரை ஏர்வாடி   சாயல்குடி  தூத்துக்குடி திருநெல்வேலி திருச்செந்தூர்  கன்னியாகுமரி போற்ற பகுதிக்கு  பேருந்து சரக்கு வாகனங்கள் போன்றவைகள் செல்வதற்கு   பட்டணம் காத்தான் E.C.R, சந்திப்பு வழியாக 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.


இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் 10 கிலோ தூரம் குறைந்து டீசல் பெட்ரோல் செலவு மிகவும் குறையும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்


இந்த ரயில்வே மேம்பாலத்தை  திறந்து வைத்தால் பொது மக்களுக்கும் வாகனம் ஓட்டிகளுக்கும்  மிகவும்   பயனுள்ளதாக அமையும். என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad