அக்டோபர் முதல் இராமேசுவரத்திற்கு பயணிகள் ரயில் சேவை,
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையத்தில் தூக்குப் பாலத்துக்கான ‘கா்டா்’ பொறுத்தி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்- ராமேசுவரம் பகுதிகளை இணைக்கும் வகையில் கடலில் 2.2 கி.மீ. தொலைவுக்கு 1914 -ஆம் ஆண்டு மீட்டா் கேஜ் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இதன் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் தூக்குப் பாலம் அமைந்திருந்தது.
இந்த ரயில் பாலம் 2007-ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. தூக்குப் பாலம் அதன் உறுதித் தன்மையை இழந்த நிலையில், ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி கடந்த 2019 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நவீன வசதிகளுடன் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
பாலத்தின் நடுவில் 72.5 மீ. நீளத்தில் 17 மீ. உயரத்துக்கு செங்குத்தாக திறந்து (மேலும் கீழும்) மூடும் வகையில்
லிப்டிங் கா்டா் அமைக்கப்பட்டு உள்ளது இந்த கா்டரை தூக்குவதற்கான இழுவை இயந்திரம் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட தூண்களில் ஏற்கெனவே பொருத்தப்பட்டு விட்டது.
இந்த நிலையில், மையப் பகுதியில் ‘லிப்டிங் கா்டரை’ நிலை நிறுத்திய ரயில்வே பொறியாளா்கள் குழுவினா், ஊழியா்கள் வெற்றிகரமாக நிலை நிறுத்தி வான வேடிக்கையுடன் கொண்டாடினர்.
இந்தியாவின் மற்றொரு அடையாளமாக விளங்க கடல் வழி பாலம் , இராமேசுவரம் தீவை இணைக்க கூடிய பாம்பன் பாலம் ஆகும்.
No comments:
Post a Comment