முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல்கலாம் அவர்களின் 9 ம் ஆண்டு நினைவு தினம்.
இன்று (27.07.2024) மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோனா இ.ஆ.ப.,அவர்கள் மலர்த்தூவி மரியாதை செய்து நினைவிடத்தில் உள்ள பதிவேட்டில் பதிவு செய்தார், முன்னதாக அவரது உறவினர்கள் பிராத்தனை செய்தனர்கள்.
அரசு அலுவலர்கள் கலாம் பெயரில் உள்ள பல்வேறு சேவையின் அமைப்பினர்கள் பொதுமக்கள் மாணவ மாணவியர்கள், கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.
அப்துல்கலாம் அவர்களின் தோற்றமுடைய சென்னை நங்க நல்லூரை சேர்ந்தவர் சைக்கிள் பயணமாக இராமேசுவரம் வந்தார் அவரை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டி வாழ்த்தினார்.
No comments:
Post a Comment