இராமநாதபுரம் பாரதிநகர் பகுதிகளில் சாலையை கடக்கும்போது . ஏற்படும். விபத்துகள் விபத்துக்களை தடுக்க கோரிக்கை .
இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பேருந்து நிலையம் முதல் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை நான்கு சாலைகள் சந்திப்பு வரையில். மாவட்டத்தின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் , ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம். மருத்துவக்கல்லூரி வளாகம், பள்ளிகள் மின்சார வாரியம், போக்குவரத்துதுறை போன்ற அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன .
இப்பகுதிகளில் காலை 8.00 மணி முதல் 11 மணிவரை மாலை 4.00மணி முதல் 7மணி வரையிலும் அலுவலகம் பள்ளி தனியார் நிறுவனங்கள் வேலைக்கு என்று அதிகம் பேர்கள் செல்வதனால் போக்குவரத்து அதிகம் உள்ளது
பாரதிநகர் பேருந்து நிறுத்ததில் இறங்கி செல்லகூடிவர்கள் சாலையை கடக்க முடியாத நிலை உள்ளது
இப்பகுதியில் தடுப்பு கப்பிவேலி அமைத்து டிராபிக் காவலர் நியமித்து அதிக வேகமாக போகும் வாகனங்களை கட்டுபடுத்தவும். போக்குவரத்தை சரி செய்து விபத்துகளை தடுக்கவும் வேண்டும். எனவும் இப்பகுதியில் உள்ள வணிகர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
இன்று 18.07.2024 காலையில் நடந்த விபத்து பாரதிநகர் பஸ் ஸ்டாப்பில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர். எதிர்பாராமல் எதிரே வந்த பைக் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் இருவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும். இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடக்காமல் தடுக்க முன்னெச்சரிகை நடவடிக்கைகள், மேற்க்கொள்ளவேண்டும்.என எதிர்பார்க்க படுகின்றன.
No comments:
Post a Comment