இராமநாதபுரம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கோரிக்கையை நிறைவேற்ற கோரி மனு
16/07/2024 இன்று இராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சி OVS திருமண மஹாலில். நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர். திரு.பா.விஸ்ணு சந்திரன் ,இ.ஆ.ப,. அவர்கள் கலந்துகொண்டு பயணாளர்கள் அரசு திட்டங்களை பெற்று பயனடைய கேட்டுக்கொண்டார்
இதில் சக்கரக்கோட்டை பஞ்சாயத்து பொதுமக்கள் பொதுநல சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
சக்கரக்கோட்டை கிராமத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செலும் சாலையில் இராமநாதபுரம் நகராட்சியின் குப்பை கிடங்கு அமைந்துள்ளது இந்தக் குப்பை கிடங்கு அமைந்த கால முதல் இதுவரையில் முறையாக கையாள்வதும் பராமரிப்பு செய்வதும் கிடையாது தொடர்ந்து தீயிட்டு எரிப்பதும் சலையிலேயே குப்பைகளை கொட்டுவதும் தொடர் கதை ஆகி வருகிறது அது மட்டும் அல்லாமல் இராமநாதபுரம் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகள் மாட்டு இறைச்சி கடை ஆட்டு இறைச்சி கடை கோழி இறைச்சி கடை மீன் இறைச்சி கடை என அனைத்து கழிவுகளையும் சாலையின் இருபுறமும் கொட்டி வருகின்றனர். ஆகையால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் அந்த சாலையில் பயணிக்க கூடிய அனைவருக்கும் தொற்றுநோய் ஏற்பட்டு வருகிறது இதனால் எம்ஜிஆர் நகர் மஞ்சன மாரியம்மன் கோவில் தெரு, சிவசக்தி நகர் சக்கரக்கோட்டை திருநகர் ஆதம் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் பெரும் பாதிப்பாக உள்ளது ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் எனவும் சக்கரக்கோட்டை கண்மாய் ஐந்து மதகிலிருந்து மழை காலங்களில் கண்மாய் நிறைந்து நீர் வெளியேறும் கால்வாயை தூர்வாரி இரு புறங்களின் கரை அமைக்கவும்.
குமரய்யா கோவில் பேருந்து நிறுத்தம் நிழல் குடை அமைக்க பல சாலைகள் ஆக்கிரமிப்புளை அகற்றவும். வாணி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது அந்த தொடக்கப் பள்ளியின் கட்டிடத்தின் மேல்கூறைகள் தட்டோடுகள் அமைக்கப்படாமல் உள்ளதால் விரிசல் ஏற்பட்டு மழைக்காலங்களில் அந்த விரிசல் வழியாக தண்ணீர் சொட்டு சொட்டாக பள்ளிக்கூடத்திற்கு விழுவதால் குழந்தைகளுக்கு சிரமத்தை எற்படுதுகின்றன ஆகவே மேற்கூரையில் தட்டோடு அமைத்து சீர் செய்ய உரிய துறையமூலம் நடவடிக்கைகள் எடுக்கவும் மேலும் அப்பகுதியில் மின் அழுத்தம் குறைவாக உள்ளதால் போதுமான அளவிற்கு மின் அழுத்தம் கிடைப்பதற்கு கூடுதல் மின் மாற்றி அமைக்கவும் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஊரணியில் இரு உயர் மின்னழுத்தம் தரக்கூடிய மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும் உரிய துறையின் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனு கொடுத்து நிறைவேற்றி தர கேட்டுக்கொண்டனர்
சக்கரக்கோட்டை பஞ்சாயத்து பொதுமக்கள் பொது நல சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் வெற்றிவேல் ஒருங்கிணைப்பாளர் இன்ஜினியர் செந்தில்குமார் அமைப்புச் செயலாளர் இராமநாதபாண்டியன் செயலாளர் கார்த்திகை பாண்டி துணைத் தலைவர் முகமது சாதிக் வழக்கறிஞர் செல்வம் துணைச் செயலாளர் யூசுப் சக்கரக்கோட்டை ஜமாத் தலைவர் துங்குஅப்துல்ரகுமான் முகமதுநாசர் ரியாஸ்முகமது சாகுல்ஹமீது வாணி ஜமாத் தலைவர் செயது அபுதாஹிர் பொருளாளர் மைதீன்கனி சீனிமுகமது ஆகியோர் மனு அளித்தனர்.
No comments:
Post a Comment