இராமநாதபுரத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் திருடிய நபர்கள் கைது - தமிழககுரல் - இராமநாதபுரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, July 17, 2024

இராமநாதபுரத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் திருடிய நபர்கள் கைது


 இராமநாதபுரத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் திருடிய நபர்கள் கைது 


இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், உத்தரகோசமங்கை காவல் நிலைய சரகம், ஆலங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பெரிய கருங்கார் உடையார் அய்யனார் கோவிலில், கடந்த 30.06.2024-ம் தேதி நிர்வாக அறை பீரோவில் வைத்திருந்த உண்டியல் பணம் மற்றும் சாமியின் 6 கிலோ வெள்ளி கவசம் ஆகியவை திருடப்பட்டது தொடர்பாக  உத்தரகோசமங்கை காவல் நிலையத்தில் குற்ற எண் 65/24 பிரிவு 457, 380 இதச பிரகாரம்  வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கீழக்கரை உட்கோட்ட குற்றப்பிரிவினர், பார்த்திபன், த/பெ.மாணிக்கம், ஆலங்குளம், செல்வகுமார், த/பெ.செந்தில்குமார், 3-வது கிராஸ்ரோடு, லால்குடி, திருச்சி, சரவணன், த/பெ.மகாலிங்கம், முதலியார் தெரு, லால்குடி, திருச்சி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் ரூபாய்.2,63,421 மற்றும் 04 செல்போன், வெள்ளி கவசம் 03 ஆகிய பொருட்களை கைப்பற்றினர். மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்த கீழக்கரை உட்கோட்ட குற்றப்பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad